Thursday, May 15, 2025

நீ ஏன் தாயே உன்னை நிருபிக்க முயற்சிக்கிறாய்

 "நான் ஒரு இஸ்லாமியப் பெண்

ஆனால் பாகிஸ்தானி அல்ல
நான் ஒரு இஸ்லாமியப் பெண்
ஆனால் நான் தீவிரவாதி அல்ல"
என்று சோபியா பேசுவதைக் கேட்க நேர்ந்தது
நீ ஏன் தாயே உன்னை நிருபிக்க முயற்சிக்கிறாய்
நீ
எங்கள் தாய்
எங்கள் சகோதரி
எங்கள் மகள்

Wednesday, May 14, 2025

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் எப்படி விடுபட்டான்?

 பெறுதல்: திரு.கோபால்

சார்,
நக்கீரன்
வழி: தோழர். Govi Lenin
அன்பின் சார்,
வணக்கம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், CPM , பங்கினை நினைத்து திமிர் கொள்பவன் நான்
அதே நேரம்
நக்கீரன் பங்கினை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்பதையும் உரக்கப் பேசுபவன்
ஆனாலும் இந்த ஒன்பது பேர் கொண்ட பட்டியலில் போதாமை உணரவில்லையா சார் நீங்கள்
பொள்ளாச்சி ஜெயராமன் மகன் எப்படி விடுபட்டான்?
விடாதீர்கள்
அ.இ.ஜ.மாதர் சங்க தேசியத்தலைவர்களில் ஒருவரான தோழர் Suganthi P அவர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுத இருக்கிறேன்
விடாதீங்க சார்
அன்புடன்,
இரா.எட்வின்
14.05.2025

ஒரு பிக்னிக்தான் சிலப்பதிகாரத்தின் தோற்றுவாய்

 புதிய ஆசிரியனும் காக்கையும் வந்ததாப்பா?

நான் ஊர்ல இல்ல எட்வின்.
எங்க?
கண்ணகி கோட்டம்
”மண்மகள் அறிந்திராத வண்ணச் சீறடிகளை
மதுரை வரை நடந்த சீரடிகளை
என் அன்பனை இழந்தேன் என்று கதறியழுதவளை
கேட்டதாகக் கூறுப்பா
மணிமேகலையை கண்ணகி மகளென்று மாதவி கூறியதை
கண்ணகி காதில் சொல்லி வாப்பா,
அள்ளிவந்த கண்ணகியில் ஒரு துண்டை அனுப்பு”
என்று சொல்கிறேன்
துண்டென்ன முழுசையும் அனுப்புகிறேன் என்ற பதில் வர சாய்கிறேன்
இப்படியான ஒரு பிக்னிக்தான் சிலப்பதிகாரத்தின் தோற்றுவாய்
இளங்கோ, வேண்மாள், சீத்தனார்
அமைச்சர்கள் புடைசூழ மலையழகை தரிசிக்க பிக்னிக் போகிறான் செங்குட்டுவன்
அங்கு அவனைக் காண வந்த மக்கள்
ஒற்றை முலையோடு நின்ற ஒரு பெண்ணை வானத்தில் இருந்து விமானத்தில் வந்தவர்கள் அதனுள் இருந்த அவளது கணவனைக் காட்டி அழைத்துப் போனார்கள் என்று சொல்கிறார்கள்
அதைக் கேட்டதும்
சாத்தனார் அது கண்ணகி என்றும்,
கண்ணகி காதையை சுருக்கமாக சொல்கிறார்
இதைக் கேட்டதும் இளங்கோ அதை ஒரு காவியமாக எழுத இருப்பதாக சொல்கிறார்
சாத்தானார் மகிழ்கிறார்
இப்படியாக,
அந்த மலைப் பயணம்தான் சிலம்பை கொடுத்திருக்கிறது
இந்த நினைவோடு சாய்ந்து கிடந்தவன்
நாட்டார் இலக்கியத்தில் ஒற்றை மொலைப் பெண்கள் குறித்து இருப்பதுகுறித்து படித்ததெல்லாம் நினைவிற்குள் வந்துபோயின
“ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி” என்பதும் நினைவிற்கு வந்தது
முகநூலைத் திறந்தால்
”அன்னாந்து அம்மா என்றேன்
ஒரு முலை உதிர்த்தாள்.
ஒவ்வொரு பசியின் கைகளிலும் ஒவ்வொரு முலைகள்.
பனங்காடே
முலையூட்ட நெடுநெடுவென வளர்ந்த தாயே
உமக்கு சலிப்பே வராதா...
கைவிடேன்
உன் மார்பை விட கனமானது உந்தன் அன்பு
சுமக்க முடியவில்லை.”
என்று Poondi Jeyaraj எழுதுகிறான்
ஆசிர்வாதம்

Tuesday, May 13, 2025

இருவருக்குமே பொய்தான் பிழைப்பு என்பதால்

 நீங்கள் இருவரும் சண்டையை நிறுத்தவில்லை எனில் உங்களுடனான வர்த்தக உறவை நிறுத்திக் கொள்வேன் என்று விரட்டித்தான் இந்தியாவையும் அமெரிக்காவையும் சண்டையை தான் நிறுத்தச் செய்ததாக ட்ரம்ப் கூறுகிறார்

எனில்
ட்ரம்ப் கூற்றுப்படி சண்டையை நிறுத்த இரு நாடுகளும் விரும்பவில்லை என்றாகிறது
ஆனால் பாகிஸ்தான் கெஞ்சியதால் சண்டையை நிறுத்தியதாக மோடி சொல்கிறார்
இருவருக்குமே பொய்தான் பிழைப்பு என்பதால் யார் சொல்வது பொய் என்பதில் குழம்பிக் கிடக்கிறோம்
#சாமங்கவிந்து 08 நிமிடம்
13-05.2015

Thursday, May 8, 2025

பெரியவனாக மாட்டேன்

 பாலஸ்தீனம்

விளையாடிக் கொண்டிருக்கிறான்

கேட்கிறார்கள்,

பெரியவனாயி என்ன செய்வ?

பெரியவனாக மாட்டேன்

விட மாட்டார்கள்

சின்னப்பிள்ளையா இருக்கப்பவே 

கொன்று போடுவார்கள்

அய்யோ, அய்யோ, ஒரு பிஞ்சு இப்படிப் பேசுவதைக் கேட்கவா இத்தனைக் காலம் வாழ்ந்தேன்

இதை எழுதிக்கொண்டிருக்கும்போதும் தெருவில் எங்கள் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்கிறது

பாகிஸ்தானிலும் குழந்தைகள் விளையாண்டுகொண்டு இருப்பார்கள்

குண்டுகளுக்கு பேதமோ, வயதோ தெரியாது

பயமாக இருக்கிறது

கொடியவர்களை எப்படி வேண்டுமானாலும் சந்தியுங்கள்

போர் வேண்டாம்

#இந்தியபாகிஸ்தான்போர்edn
07.05.2025

Wednesday, May 7, 2025

ஏகன் அநேகன் என்ற உயரிய விழுமியத்தின் தளபதி நீங்கள்

பஹல்காம்

நீ இந்துவா இஸ்லாமியனா என்று கேட்டு 

இந்து என்று உறுதிப்பட்டால்தான் சுட்டார்கள் என்று சங்கிகள் சொல்வதை உண்மை என்றே கொள்வோம்

வாய்ப்பை மறுக்கவில்லை

எதற்காக அவர்கள் அப்படிக் கேட்டார்கள் என்று ஒரு நிமிடம் யோசிப்போம்

பாரபட்சமின்றி இந்தியர்களைக் கொன்றால் 

தங்களை எதிர்ப்பதில் இந்தியர்கள் ஒன்றுபடுவார்கள்

இப்படிப் பிரித்துக் கேட்டுக் கொன்றால் இந்தியா மத ரீதியாக நம்மை எதிர்ப்பதில் பிளவுபடும்

அப்படியாகப் பிளவுபட வேண்டும் 

என்று அவன் கருதுகிறான்

மதுரை ஆதீனம் சென்னை SRM வளாகத்தில் பாரி வேந்தர் ஏற்பாடு செய்திருந்த சைவ மாநாட்டிற்கு காரில் சென்றுகொண்டிருக்கிறார்.

வழியில் உளுந்தூர்பேட்டை அருகே ஒரு சன்னமான விபத்தை சந்திக்கிறார்

இரண்டு கார்களிலும் வந்தவர்கள் சண்டைபோடுகிறார்கள். சமரசம் ஆகிறார்கள். சென்றுவிடுகிறார்கள்.

அவ்வளவுதான்

மாநாட்டில் உரையாற்றும்போது பாகிஸ்தான் தன்னைக் கொல்ல சதி செய்வதாகக் கூறுகிறார்

வெளியே வந்ததும் யார் அவர்கள் என்று நிரூபர்கள் கேட்கிறார்கள்

தொப்பி, தாடி

தொப்பி தாடி என்கிறார்

அது கொலை முயற்சி என்பது பச்சைப் பொய்

அவரது உடல்மொழி அசிங்கம்

இவர் ஏன் இப்படி சொல்கிறார்

இந்து முஸ்லீம் பிளவுபட வேண்டும் என்று விரும்புகிறார்

அவனும் அதைத்தானே செய்கிறான்

ஒன்று சொல்லவேண்டும் சன்னிதானம், அவர்களே,

ஏகன் அநேகன் என்ற உயரிய, விழுமியம் மிக்க கோட்பாட்டின் தளபதி நீங்கள் 

அவன் தீவிரவாதி

அறமற்றவன்

நீங்களுமா?

07.05.2025

Monday, May 5, 2025

கனவு காண காசும் வேண்டும்


தோழர் சுபவீ முதன்முறையாக லண்டன் போனபோது கேட்கிறார்கள்

பார்க்க வேண்டிய இடங்கள் எவை

முதலும் முத்தாய்ப்புமாக ஒரு கல்லறை என்கிறார்

கண்கள் விரிய கேட்டவர் சொல்கிறார்

காரல் மார்க்ஸ் கல்லறை...

ஆம்

இதைப் படித்தபோது கீர்த்தியிடம் சொன்னேன்

எனக்கும் மார்க்ஸ் கல்லறைக்கு மரியாதை செய்யனும் வெள்ளை

அதெற்கெல்லாம் காசிருக்கனும்

நீ மொதல்ல போய் அவர் இருந்திருந்தாலும்

அவராலும் உன் கல்லறைக்கும் வரமுடியாது

ரெண்டுபேரும் காசில்லாதவர்கள்

கனவு காண காசும் வேண்டும் என்றாள்

அப்போது அவள் எட்டு அல்லது ஒன்பாதம் வகுப்பில்

இன்று அவள் MD நீட்டிற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள்

மாறவில்லை எதுவும்

முத்தம் மார்க்ஸ்
 

அழியும் என்பது அதிகம் என்றே கொண்டாலும்

 தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட 1200 கிலோமீட்டர் கடற்கரை இருப்பதாகத் தெரிகிறது

எத்தனை கிராமங்கள் நகரங்கள் இந்தக் கடற்கரையில் உள்ளன

எத்தனை குடும்பங்கள்?

எத்தனை தனி நபர்கள்?

தெரியவில்லை

ஆனால்

வெப்பம் அதிகரித்துக் கொண்டே உள்ளது
கடலும் சூடாகி வருகிறது

விளைவாக, கடல்மட்டம் தரைமட்டத்தை விட உயர்ந்து கொண்டே வருகிறது

சென்னை உள்ளிட்ட பல ஊர்கள் அழியுமளவிற்கு கடல் மட்டம் உயரும் என்கிறார்கள்

அழியும் என்பது அதிகம் என்றே கொண்டாலும்

மக்கள் வாழ முடியாத இடங்களாக அவை நிச்சயமாக மாறக் கூடும்

எனில், அந்த மக்கள் உள்புறம் நோக்கி புலம்பெயர நேரும்

தமிழ் மக்கள் தமிழ் மண்ணிற்குள் புலம் பெயர்வர்

இது பல லட்சமளவில் இருக்கலாம்

இதுகுறித்து

எப்போது பேசுவோம்?

எப்போது பேச வைப்போம்?

05.05.2025

Sunday, May 4, 2025

நான் உங்க பேன்

 04.05.2025 முதல் ஒரு வாரத்திற்கு கீர்த்தனாவிற்கு MD நீட் கோச்சிங்

கன்னியா குமரியில்
நேற்றிரவு பேருந்து ஏற்றிவிட பெரம்பலூர் நால்ரோட்டில்
10.50
சென்னையில் இருந்து வந்த பேருந்தில் இருந்து ஒரு குழந்தை இறங்குகிறாள்
கீர்த்தனா ஏறுகிறாள்
கிளம்ப எத்தனிக்கிறேன்
அப்பா, தம்பி வர வரைக்கும் இருங்க. பயமாருக்கு
நிற்கிறேன்
அரட்டை, அரட்டை,
அப்படி ஒரு அரட்டை
தம்பி வந்ததும்
படக்கென ஏறி போய்விட்டாள்
சொல்லக்கூட இல்லை
பொக்கென்றாகிவிட்டது
வீட்டிற்கு வந்ததும் அவள் சொல்லாமல் போனதே வருத்தமாக இருந்தது
போன்
எட்வின் அப்பா, பத்திரமா வந்துட்டேன்
எட்வினா? எப்படித் தெரியும்?
நம்பர் எப்படி?
உலகத்துக்கே தெரியறமாதிரிதான்
முகநூலில் வச்சிருக்கீங்களே
நான் உங்க பேன்
அய்ய்யோ

Saturday, May 3, 2025

இந்தியாவை என்னவென்று சொல்லும் கூகுள்

 ட்ரம்ப் வந்ததும் நிறைய சொன்னார்

மெக்சிகோ வளைகுடாவிற்கு இனி அமெரிக்க வளைகுடா என்று பெயர் என்பதும் அவற்றுள் ஒன்று
சிரித்துக் கடக்கலாம் என்று யோசித்தவற்றுள் இதுவும் ஒன்று
ஆனால்
கூகுளில் அமெரிக்காவில் தேடினால் அது அமெரிக்க வளைகுடா என்றும்
அமெரிக்கா தாண்டினால் அதே கூகுள் மெக்சிகோ வளைகுடா என்று காட்டுவதாகவும்
நேற்று நடந்த மே தினப் பொதுக் கூட்டத்தில் தோழர் சாமிநாதன் கூறினார்
அப்போதிருந்து ஒரு எண்ணம்
அமெரிக்க எல்லைக்குள் இந்தியாவை என்னவென்று சொல்லும் கூகுள்

Thursday, May 1, 2025

இன்னும் எத்தனை காலத்திற்குதான்

 "அந்தச் 
சித்தாளின் தலையில்
வீடிருந்தது" 

என்கிறாள் இளமதி 

எந்த விருதிற்கும் தகுதியான 

இன்றைய மே தினத்திற்கும் பொருந்துகிற 
நான்கு சொற்கள்

இன்னும் எத்தனை காலத்திற்குதான் 

அந்தச் சித்தாளின் தலையில் மட்டுமே வீடிருக்கும் என்ற கேள்விதான்

இந்த மே தினத்திற்கான வாழ்த்துச் செய்தி

0l.05.2025

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...